ஹவுஸ் ஓனர் மனைவியுடன் கள்ளக்காதல்... உயிருடன் புதைக்கப்பட்ட காதலன்!

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது பாபா மஸ்த்நாத் என்ற பல்கலைக்கழகம். இங்கு ஜக்தீப் என்பவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் 24ம் தேதி மாயமானார்.. அவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் பரவின.. இதையடுத்து, போலீசாரின் தேடும் பணி ஆரம்பமானது. இறுதியில், 3 மாதங்களுக்கு பிறகு, அதாவது நேற்று முன்தினம் ஜகதீப்பின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, “ஜஜ்ஜார் மாவட்டம் மண்டோதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்தீப்.. இவர் கடந்த டிசம்பர் 24ம் தேதி வழக்கம்போல் காலேஜூக்கு சென்றிருக்கிறார்.. அன்று மாலை வீட்டுக்கு திரும்பியவர், அதற்கு பிறகு காணவில்லை. சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பிறகு, அதாவது பிப்ரவரி 3ம் தேதி ஜகதீப் , மாயமானதாக சிவாஜி காலனி போலீசில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குபதிவு செய்து, ஜக்தீப்பை கடந்த 3 மாதங்களாகத் தேடி வந்தனர். இறுதியாக, ஜகதீப்பின் செல்போன் அழைப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.. அத்துடன், தனிப்படை போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்களின்படி ஜகதீப்பை கொன்ற ஹர்தீப், தரம்பால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது பல்வேறு உண்மைகள் வெளியே வந்தன.. அதாவது, ஜக்தீப் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.. அதே வீட்டில் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயம் தெரிந்து, பெண்ணின் கணவர் இருவரையுமே கண்டித்துள்ளார். ஆனால், கள்ளஜோடியின் உறவு தொடர்ந்து வந்துள்ளது.. அதனால்தான், ஜகதீப்பை தீர்த்துக்கட்ட அந்தப் பெண்ணின் கணவர் முடிவு செய்துளளனர்..
இதற்காக, ஜகதீப் வீட்டிற்கு சென்ற ஹர்தீப்பும் அவரது நண்பர் தரம்பாலும், ஜகதீப்பை கடுமையாக தாக்கி அவரது கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டுள்ளனர்.. சத்தம் போடாமல் இருப்பதற்காக, அவரது வாயில் டேப்பை போட்டு இறுக்கமாக ஒட்டியிருக்கிறார்கள்.. பிறகு, ரோஹ்தக்கிலிருந்து 61 கி.மீ தூரத்திலுள்ள சர்கி தாத்ரியின் பாண்டவாஸ் என்ற கிராமத்திற்கு காரில் கடத்தி சென்றிருக்கிறார்கள்.
காரணம், அந்த இடம்தான் ஆள் அரவமற்ற வெறிச்சோடி காணப்படும் இடமாகும்.. அங்குள்ள வயலில் 7 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அதில், ஜகதீப்பை உயிருடன் மண்ணில் புதைத்துவிட்டார்கள்.. கைதானவர்கள் வாக்குமூலத்தை பெற்ற, நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஜகதீப்பின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காகவும், தடவியவில் ஆய்வுக்காகவும் அனுப்பி வைத்துள்ளோம்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.. ஜக்தீப்பை 7 அடிக்கு பள்ளம் தோண்டி புதைத்ததுடன், எரிக்கவும் முயன்றிருக்கிறார்கள்.. எனவே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் முழு விவரம் தெரியவரும்” என்றார்.