சென்னையில் அரங்கேறிய கொடூரம்..! பாலிடெக்னிக் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை..!

தரமணியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் இருந்து முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி தனது தோழியுடன் விடுதியை விட்டு வெள்ளிக்கிழமை அன்று வெளியே சென்றுள்ளார். அன்று இரவு 10 மணியளவில் ஒரு மாணவி மட்டும் விடுதிக்கு வந்துள்ளார். அவரிடம் வராத மாணவி குறித்து கேட்டபோது ஆண் நண்பருடன் வெளியில் சென்றதாக கூறியுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் இதனை கண்டுகொள்ளாமல் விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை உடல் முழுவதும் காயத்துடன் வந்த மாணவியிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நண்பர் அழைத்ததாகவும், அங்கே சென்றதும் போதை பொருளை கொடுத்து ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.