1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் அரங்கேறிய கொடூரம்..! ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை..!

Q

புனே-கோவை இடையிலான குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏ.சி., கோச்சில், தந்தையுடன் எட்டு வயது சிறுமி பயணித்தார். ரயிலில் படுக்கை விரிப்பை மாற்றுதல், கழிவறைசுத்தம் செய்யும் பணியில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளியான உ.பி.மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த நவீதம் சிங், 30, ஈடுபட்டிருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணி அளவில் சேலம்-ஈரோடுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் சென்றபோது, சிறுமிக்கு நவீதம் சிங் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி கூச்சலிடவே ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

நவீதம் சிங்கை பிடிக்க, ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைத்து தேடினர். இதில் ஈரோடு ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த நவீதம் சிங்கை, நேற்று கைது செய்தனர்.

Trending News

Latest News

You May Like