மீண்டும் அரங்கேறிய கொடூரம்..! தனியாக வீடு திரும்பிய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..!
கர்நாடகா HSR லேஅவுட் பகுதியில் தனியார் கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. பார்ட்டியை கொண்டாடிவிட்டு மதுபோதையில் வெளியில் வந்த கல்லூரி மாணவி தனது இருசக்கர வாகனத்தில் தனியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மாணவி மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது திடீரென அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி தனது வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார். மாணவி மதுபோதையில் இருப்பதை அறிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது நண்பர்களை வரவழைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதி காவல் துறையினர் குற்றவாளிகளை 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக காவல் அதிகாரி கூறுகையில், “பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கர்நாடகாவை சேர்ந்தவர் கிடையாது. வேறு மாநிலத்தில் இருந்து இங்கு படிப்பதற்காக மாணவி வந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளார். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.