கொடூரம்! குடிக்க பணம் தராத கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்!!

மதுகுடிக்க பணம் தராத கர்ப்பிணி மனைவியை குடிகார கணவன் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த திலேஷ்வருக்கும், பிரியா தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. திலேஷ்வர் மது அருந்திவிட்டு பிரியாவை அடித்து வந்ததாகவும், மது வாங்குவதற்காக வீட்டு உபயோகப் பொருட்களையும் விற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி மது வாங்குவதற்காக பணம் கேட்ட திலேஷ்வருக்கு ப்ரியா பணம் கொடுக்க மறுத்ததாகவும், வாக்குவாதம் முற்றியதால் அதைத் தொடர்ந்து அவர் ப்ரியாவைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்றதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து திலேஷ்வர் கஞ்சு போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 14ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெங்களூருவில் 40 வயது நபர் தனது 32 வயது மனைவியை சந்தேகத்தின் பேரில் கத்தியால் குத்திக் கொன்றதாக கூறப்படும் சில வாரங்களுக்குப் பிறகு இதே போன்ற ஒரு சம்பவம் ஜார்க்கண்ட்டில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in