கோர விமான விபத்து.. நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்..!

சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 17) செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்திடம் கூலி படம் அப்டேட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ரஜினிகாந்த் ஆகஸ்ட் 14 கூலி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது என பதிலளித்தார்.
விமான விபத்து தொடர்பான கேள்விக்கு, “ஆண்டவன் அருளால் இனி இதுபோன்று நடக்கக்கூடாது என்று வேண்டி கொள்கிறேன். ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது” என்று கூறினார்.
ஜெயிலர் 2 படம் குறித்த கேள்விக்கு, அந்த படத்தின் சூட்டிங்கிற்காகத்தான் இப்போது சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.