சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே ஆணவ கொலைகள் நடந்து வருகிறது - எம்.பி கமலஹாசன் பரபரப்பு பேட்டி!
நாடாளுமன்றத்தில் கூட்டதொடர் விவாதத்தில் கலந்து கொண்டு பின்னர் எம்.பி கமலஹாசன் சென்னை திரும்பினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். வெளியில் இருந்து தான் நாம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை பார்த்து இருக்கிறேம். ஆனால் உள்ளே வந்த பிறகு தான் அதன் அருமை புரிகிறது. அதனுடைய மகத்துவம் புரிகிறது. என்னுடைய முனைப்பு நாடு அதுவும் தமிழ்நாடு ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளது. இது தான் என்னுடைய நோக்கம் என்று கூறினார்.
தமிழ்நாட்டிற்காக உரிமைகளை பெற்று தருவேன் என்று கூறினார். தொடர்ந்து என்னுடைய கடமையை சிறப்பாக செய்வேன் என்று கூறினார்.மேலும் நாடாளுமன்றத்தில் பேசியத்தை பொதுவழியில் பேசக்கூடாது என்பது தான் விதி. அந்த சூழலில் வரும் போது பேசுவோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது முக்கியமான பொறுப்பு என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.
இதனையடுத்து நெல்லையில் நடத்த ஆணவக்கொலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் ஆணவக் கொலைகள் இந்தியாவில் நீண்ட காலமாக உள்ளன. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே இவை நடந்திருக்கின்றன.
இதற்குக் காரணம் நம் சமுதாய அமைப்பு தான். இந்த அமைப்பை மாற்ற வேண்டியது அவசியம்."கட்சிகள் வரும் போகும் நாடு நடந்தே இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். அதாவது, அரசியல் கட்சிகள் மாறினாலும், நாடு தொடர்ந்து இயங்கும் என்பதை அவர் வலியுறுத்தினார்.