1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் அரங்கேறிய ஆணவப் படுகொலை...நடந்தது என்ன ?

1

பீகாரை சேர்ந்தவர் முகேஷ் சிங். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் 25 வயதுடைய தனது மகளை கொலை செய்து வீட்டு பாத்ரூமில் பூட்டி மறைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது முகேஷ் சிங்கின் மகள் தன்னுடன் கல்லூரியில் படித்த வேற்று சமூகத்து வாலிபரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

ஏப்ரல் 4ம் தேதி முகேஷ் சிங்கின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதலருடன் டெல்லிக்கு சென்று விட்டார். உடனே முகேஷ் தனது மகளை வீட்டிற்கு வருமாறு கெஞ்சி அழைத்தார். இதனால் முகேஷ் சிங்கின் மகள் தந்தையின் விருப்பத்திற்கு இணங்கி வீட்டிற்கு வந்தார். அப்போது முகேஷ் சிங் தனது மகளை கொலை செய்து வீட்டு பாத்ரூமில் வைத்து பூட்டி விட்டார். வீட்டிற்கு வந்த மகள் எங்கே என மனைவி கேட்டபோது மீண்டும் வீட்டை விட்டு ஓடி விட்டதாக முகேஷ் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து முகேஷ் சிங்கின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.

Trending News

Latest News

You May Like