1. Home
  2. ஆரோக்கியம்

தேனில் கலப்படம்.. கண்டுபிடிப்பது எப்படி..?



“இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்களில், அதிக சத்துக்கள் நிறைந்தது தேன். கலப்படமற்ற தேன் கெட்டுப் போகாது. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. உள்ளூர் மளிகைக் கடை முதல், டிபார்ட்மென்டல் ஸ்டோர், மருந்துக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் என எல்லா இடங்களிலும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேன் விற்பனை செய்யப்படுகிறது.

சாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா? - அதிர்ச்சி தரும் ஆய்வு  முடிவுகள்!
தட்டுப்பாடு மற்றும் விலை காரணமாக தேனில் கலப்படம் செய்வது அதிகரித்து விட்டது. கலப்படம் செய்யப்பட்ட தேனை வீட்டில் செய்யக்கூடிய எளிய சோதனையில் கண்டுபிடிக்க முடியும்.

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு துளி தேனை விட வேண்டும். மெல்லிய நூலிழை போல தேன் துளி தண்ணீரில் இறங்கினால் அது நல்ல தேன்; கலப்படம் செய்யப்பட்ட தேன் அப்படி இறங்காது. சொட்டு சொட்டாக இறங்கும்.

தண்ணீரில் விடும்போது தேன் கரைந்து விட்டால் கலப்படம் செய்யப்பட்டது என்று அர்த்தம். கரைந்து போகாமல் பாத்திரத்தின் அடிப்படையில் தங்கினால், அது சுத்தமான தேன்.

கண்ணாடி பாத்திரத்தில் தேன் ஊற்றி சில மணி நேரம் வைத்திருந்தாலே ஒரிஜினல், கலப்படம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்து விடும். சுத்தமான தேன் அடர்த்தி ஒரே சீராக இருக்கும். ஆனால், கலப்படம் செய்யப்பட்ட தேனில் அடர்த்தி மாறியிருப்பது நமக்கு புலப்படும்.

சாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா? - அதிர்ச்சி தரும் ஆய்வு  முடிவுகள்!
இதேபோல, சர்க்கரை அல்லது வெல்லத்தில் சாக்கரின் இருப்பதையும் அறிய முடியும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் சிறிய அளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்க வேண்டும். சுண்ணாம்புத்தூள் அல்லது மாவு இருந்தால் கண்ணாடி பாத்திரத்தின் அடிப் பகுதியில் படியும். இதன் மூலம் கலப்படத்தை எளிதில் அறியலாம்” என்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறையினர்.

Trending News

Latest News

You May Like