அலுவலகத்தில் புகுந்து விஏஓ மற்றும் உதவியாளர் மீது கொலைவெறி தாக்குதல் !

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் தேவராஜ் (30). இவர் சோழவரம் ஒன்றியம், செம்புலிவரம் சிறுணியம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது உதவியாளராக மாற்றுத்திறனாளியான குமார் (35) உள்ளார்.
இவர்கள் இருவரும் பணியில் இருந்தப்போது மாலை நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அலுவலகத்திற்கு வந்து சான்றிதழ் குறித்து கேட்டார்.
அப்போது சோழவரத்தைச் சேர்ந்த இருவர் திடீரென அலுவலகத்தில் புகுந்து அப்பெண்ணிடம் தகராறு செய்தனர். இதனை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ், உதவியாளர் குமார் ஆகியோர் அக்கும்பல் தாக்கியது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியதோடு அங்கிருந்த பதிவேடுகளையும் வீசி எரிந்தனர்.
பின்னர் இது தொடர்பான புகாரில், பெண்ணிடம் தகராறு செய்து தாக்குதல் நடத்தியது சோழவரத்தைச் சேர்ந்த நாகராஜ் (40), கார்த்திக் (42) என்பது தெரியவந்தது. அவர்களை தேடிய போலீசார் அதே பகுதியில் பதுங்கியிருந்தபோது நாகராஜை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவான கார்த்திக்கை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in