ராஷ்மிகா மந்தனாவிற்கு தேடி வந்த பதவி - பிராண்ட் அம்பாசிடர் பதவியை வழங்கி உள்துறை அமைச்சகம்..!
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாசமான போலி வீடியோ( Deep Fake) சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்மூலம் அந்த வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த நிலையில்தான், ராஷ்மிகா டீப் ஃபேக் வீடியோவொன்று வெளியானதை துணிச்சலாகக் கையாண்டார்.
இந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கம் வேண்டும் என்றும், சைபர் கிரைம் போலீசாரிடம் வழக்குப்பதிவு செய்தார். இதனையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், வேறொரு பெண் இருந்த வீடியோவில் ராஷ்மிகாவின் முகம் மாற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு , இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு குழுவின் பிராண்ட் அம்பாசிடராகப் பதவியை வழங்கி உள்துறை அமைச்சகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட பதிவில், “டிஜிட்டல் உலகத்தில் வாழும் நாம் பல நேரங்களில் சைபர் குற்றங்களால் பாதிப்பிற்கு உள்ளாகுகிறோம். சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், ஆன்லைன் உலகத்தைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் நேரம் வந்துவிட்டது என நம்புகிறேன்.
மக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் பாதுகாப்பான சூழலை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐ4சி (I4C – Indian Cyber Crime Coordination Centre)க்கான பிராண்ட் அம்பாசிடராக நான் பொறுப்பேற்றுள்ளேன்.
இதன்பிறகு, இணையக் குற்றங்கள்குறித்த விழிப்புணர்வை அதிகளவு ஏற்படுத்த உள்ளேன். மேலும், அந்தக் குற்றங்களிலிருந்து உங்களை முடிந்த அளவு பாதுகாக்கவும் விரும்புகிறேன். சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் 1930 என்ற எண்ணிற்கு சைபர் குற்றங்கள்குறித்து புகாரளிக்கலாம்.
அல்லது அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார்களைப் பதிவு செய்யலாம். உங்கள் புகார் தொடர்பாக அரசாங்கத்துடன் இணைந்து நானும் உதவ உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.