ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!
பீகார் பெகுசாராய் பகுதியில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் கார் மூலம் ஹெலிபேட் தளத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது, ஹெலிகாப்டர் புறப்பட்ட போது, கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய நிலையில் மீண்டும் வானில் பறந்து சென்றது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஹெலிகாப்டர் ஏன் நிலை தடுமாறியது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் தவறி விழுந்த நிலையில், மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.