பிரபல ஹாலிவுட் நடிகர் சாட் மெக்வீன் காலமானார்..!
பிரபல ஹாலிவுட் நடிகர் சாட் மெக்வீன். இவர் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘தி கராத்தே கிட்’ படத்தில் டச் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, டெத் ரிங், பயர்பவர், ரெட் லைன் போன்ற ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் கார் ரேஷிங்கிலும் கொடி கட்டி பறந்தவர்.
இந்நிலையில், நடிகர் மற்றும் ரேசரான சாட் மெக்வீன்(63) கடந்த புதன்கிழமை காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.