நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நாளை அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை மற்று மொத்த விற்பனையாளர்கள், பார்கள் மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
அதே நேரம் அன்றைய தினத்தில் எந்த விதத்திலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறுபவர்கள் மீது மதுபான விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.