பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை..!

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இன்று பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வந்திருந்த ஆசிரியர்கள் சிறுத்தை குறித்து தகவல் கூறியுள்ளனர். பல்கலைக்கழக மைதானத்தில் பயிற்சிக்கு வந்திருந்த மாணவர்களும் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்துள்ளனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை பல்கலைக்கழக மைதானத்தில் விளையாட்டு போட்டி ஒன்று நடைபெற்ற இருந்த நிலையில் அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று அதற்கான பயிற்சியில் ஈடுபட்ட வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பல்கலைக்கழக ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல்கலைக்கழக அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வனத்துறையினர் தேடுதல் பணியை தொடர்ந்து சிறுத்தை கண்டறியும் பட்சத்தில் கூண்டு வைத்து பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்