நாளை 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
புதுவையில் ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏராளமான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகள் முகாம்களாக மாறவுள்ளதால் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து பள்ளி, கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.