1. Home
  2. தமிழ்நாடு

நாளை 5 மாவட்ட பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!

1

தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதாவது நாளை மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் இருக்கக்கூடிய ஐந்து மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4 ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கக்கூடிய அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் அதிகாரப்பூர்வமான உத்தரவை பிறப்பித்துள்ளார்கள். 

சுவாமி அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் மாதம் நான்காம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது வரும் மார்ச் 4 ஆம் தேதி அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினம் வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறன. இதனையடுத்து மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவை பிறப்பித்துள்ளனர். எனவே இந்த நான்கு மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கக்கூடிய எந்த வகையான ஒரு அரசு நிறுவனங்களோ அல்லது தனியார் பள்ளி, கல்லூரிகளோ செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் மாதம் 4 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை என விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்வதற்காக மார்ச் 15 ஆம் தேதி வரக்கூடிய சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Trending News

Latest News

You May Like