#JUST IN : நாளை மேலும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
புயல் புதுச்சேரிக்கு அருகேயே மையம் கொண்டதன் காரணமாக, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விடிய-விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்நிலையில், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், நாளை (டிச.02) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவு!
கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு உத்தரவு!
திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் (நாளை (டிச.02) விடுமுறை