நாளை 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். ஒரு சிலர் வீடுகளை இழந்து உள்ளதாகவும், வீடுகளில் உள்ள பொருள்களை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
- கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
- புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
- விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
- ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு!
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 03) விடுமுறை அறிவிப்பு
- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவிப்பு
- கனமழை பாதிப்புகள் காரணமாக புதுச்சேரி பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
- கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்