1. Home
  2. தமிழ்நாடு

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Q

நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூன்14) அதிகனமழை (ரெட் அலர்ட்) பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையின் போது எவ்வித அசம்பாவிதங்களும், பொருட்சேதமும் ஏற்படாத வகையில் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

நாளை சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் இயங்கும். ஆனால் தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதால் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பை மீறி, ஏதேனும் பள்ளிகள் செயல்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like