நாளை புதுச்சேரியின் மாகே பிராந்தியத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு..!
தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதிளில் அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டிலும் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், மாஹே பிராந்தியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டமிட்டபடி நாளை தேர்வுகள் நடைபெறும் எனவும் பிராந்திய நிர்வாகி மோகன்குமார் அறிவித்துள்ளார்.