நாளை காஞ்சிபுரத்தில் இந்த 11 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!
காஞ்சிபுரத்தில் பல்வேறு பரிகார தலங்களும், வைணவ திவ்ய தேசங்களும், புகழ்பெற்ற சைவ திருக்கோயில்களும் உள்ள நிலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனத்திற்காக காஞ்சிபுரம் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்து தற்போது நிறைவு பெற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் 33 யாக சாலைகள் அமைக்கப்பட்டு 160 சிவாச்சாரியார்களால் பல்வேறு காலநிலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் இத்திருக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், இக்கோயிலைச் சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள 1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி, 2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3.அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம், 4.அந்திரசன் பள்ளி, 5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி. 6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி. 7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. 8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி மற்றும் 9. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள். 10.ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி இருந்தார்.
இதனைக் கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை மேற்படி பள்ளிகளுக்கு 01.02.2024 அன்று மேற்படி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.