1. Home
  2. தமிழ்நாடு

வரும் 30ம் தேதி விடுமுறை அறிவிப்பு..! இவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை..!

1

தீபாவளி பண்டிகையானது வருகிற வியாழக்கிழமை வருகிறது என்பதால் அதற்கு அடுத்த நாள் 31-ந் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையானது விடப்பட்டுள்ளது.

அதேபோல் மக்கள் அனைவரும் அதற்கு முந்தையை நாளில் விடுமுறை விட வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் . இந்நிலையில் அரசு சார்பில் அதற்கு முந்தைய நாள் 30-ந் தேதி அதாவது புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி புதுச்சேரி காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 30- ம் தேதி புதுச்சேரி காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும். இதற்கு மாற்று நாளாக 16-ந் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும். அதே விடுமுறை நாளில் முக்கிய அலுவல் சார்ந்த அலுவலகங்கள் செயல்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய நாளும் விடுமுறை விடப்பட்டதற்கு அனைத்து மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது . இதன் காரணமாக 30- ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like