1. Home
  2. தமிழ்நாடு

அனைவரும் வீட்டில் தேசியக்கொடி ஏற்றுங்கள்: மத்திய அரசின் சான்றிதழைப் பெறுங்கள்..!

1

உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க செய்வதன் மூலம் மத்திய அரசின் சான்றிதழை பெறும் வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க விடுங்கள். அதை செல்ஃபி எடுத்து https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் இருப்பிடத்தையும் பின் செய்யுங்கள்.இதன் மூலம் உங்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும்.

மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியதையும், தேசியக் கொடி அருகே நின்று செல்பி எடுத்து பதிவேற்றம் செய்யவும், மத்திய அரசு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியது. Hargartiranga.com என்ற இணையதளத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியையும், தேசியக் கொடிக்கு அருகே செல்பி எடுத்தும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்பவர்களுக்கு மத்தியஅரசு ஊக்கச் சான்று வழங்குகிறது.

இந்த சான்றிதழை எவ்வாறு பெறுவது என்பது குறித்துப் பார்க்கலாம்.

1.    Hargartiranga.com என்ற இணையதளத்துக்குள் செல்ல வேண்டும்

2.    ஹோம்பேஜில் pin a flag என்ற பட்டனை அழுத்த வேண்டும்

3.    அதன்பின் நீங்களும் வசிக்கும் இடத்துக்கு இந்த இணையதளம் செல்லும்

4.    அதில் உள்ள படிவத்தில் பெயர்,  செல்போன் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

5.    ஒருவேளை உங்களிடம் இடத்தைஅல்லது வீட்டை கூகுள் மேப்பால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

6.    உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம். இது கட்டாயமல்ல. 

7.    ஒரு மேப் ஒன்று உருவாகும். அதில் உங்கள் வசிப்பிடம் குறித்து சரியாக குறிப்பிட்டு பின் செய்ய வேண்டும்.

8.    அதன்பின் அதில் ஒரு கொடி ஒன்று பின் ஆனபின், தங்களின் பங்கேற்புக்கு நன்றி என்றசெய்தி வரும்.

9.    நீங்கள் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்து கொடியே பின் செய்து விட்டீர்கள். பங்கேற்புக்கான ஊக்கச் சான்றிதழை பிஎன்ஜி பார்மேட்டில் பதிவிறக்கம் செய்யலாம்.

10.    இதில் தேசியக் கொடி அருகே செல்பி எடுத்து புகைப்படம் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவேற்றம் போது செல்பியுடன் உங்கள் பெயரும் அதில் பதிவிடப்படும். உங்கள் புகைப்படத்தை இணையதளம்  பயன்படுத்திக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like