1. Home
  2. தமிழ்நாடு

அடிச்சது ஜாக்பாட்..! தமிழக அரசு பேருந்தில் பயணித்தவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு அறிவிப்பு..!

1

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, TNSTC செயலி etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.

வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, இதர நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும் திட்டம் ஜனவரி-2024 முதல் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  ஆகஸ்ட்-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் பதிமூன்று (13) பயணிகளை மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் (மு.கூ.பொ) டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், (02.09.2024) கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.

அதன் விவரங்கள் கீழ்வருமாறு:

1

ஆகஸ்ட்-2024 மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகளுக்கு பரிசுகள் விரைவில் வழங்கப்படும்.

Trending News

Latest News

You May Like