1. Home
  2. தமிழ்நாடு

அடித்தது ஜாக்பாட்! ரூபே கார்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை !

அடித்தது ஜாக்பாட்! ரூபே கார்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை !


பண்டிகை காலங்களில் "ரூபே கார்டை" பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் புதிய சலுகைகள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு போன்ற அந்நிய நிறுவனங்களின் கார்டுகள் பயன்பாட்டில் இருந்த நிலையில், இந்திய அரசு ரூபே கார்டை கடந்த 2012 -ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்தது.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம். ஆன்லைன் பேமெண்ட், ஷாப்பிங் செய்யவும் பயன்படுத்தலாம் என அறிவித்தது.மேலும்,ரூபே கார்டுகளுக்கான பரிவரித்தனைக் கட்டணம் மற்ற கார்டுகளைவிட குறைவு. இதனால் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பண்டிகை காலத்தை யொட்டி, ரூபே கார்டு பயனாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பண்டிகைக் காலத்தில், தேவையான பொருட்களை வாங்கும்போது 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு டெலிவரி, ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் RuPay Festive Carnival சலுகையை பயன்படுத்தி பயன்பெற முடியும். ஆனால், அமேசான் மற்றும் ஸ்விகி உள்ளிட்ட பிராண்டுகளின் கீழ் பொருட்களை வாங்கினால் 10 முதல் 65 சதவீதம் வரையில் தள்ளுபடி விலையில் பொருட்களை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை குறித்து பேசிய வங்கி அதிகாரி ஒருவர், பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு "ரூபே கார்டு" பல்வேறு சலுகைகளை வழங்குவதாகவும், மேலும், இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like