1. Home
  2. தமிழ்நாடு

தன் கையே தனக்கு உதவி..! உணவு டெலிவரி செய்து உழைக்கும் மாற்றுத்திறனாளி பெண்..!

1

சொமோட்டா நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்து வருகிறார் ரிஹானா.  இவர் ஒரு மாற்றுத்திறனாளி .இவருடைய நம்பிக்கையின் மூலமாக சென்னையில் உள்ள தனியார் நிறுவனமான சொமோட்டாவில் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார்.

ரிஹானாவுக்கு சிறுவயதில் போலியோ தாக்கத்தால் அவருடைய கால்கள் முடங்கின. இந்த நிலையிலும் அவர் 10 ஆம் வகுப்பு வரை படித்து படிப்பில் தேர்ச்சி பெற்றார். ஒரு அடி கூட நகர மற்றவரின் உதவியை எதிர்பார்க்கும் இவர் தனது முயற்சியால் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்தார். இருப்பினும் வீட்டிலேயே முடங்கிவிடக் கூடாது என நினைத்த அவர்  தன்நம்மிக்கையுடன் சொமோட்டா நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் சேர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் உரையவைத்துள்ளார்.இவரின் செயலானது மாற்றுத்திறனாளிகளுக்கு தன்நம்பிக்கையை வளர்க்கும் பெண்ணாக உள்ளார்.

மாற்றுத்திறனாளியான ரிஹானா கூறுகையில்;எனக்கு வெளியுலகமே தெரியாது.இருந்தாலும் நானும் வெளி உலகத்தில் சகஜமாகா மற்றவர்களைப் போல வாழ வேண்டும். ஆதலால் உணவு டெலிவரி செய்யும் தொழிலை தேர்வு செய்தேன். இங்கு எனக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைப்பதாகவும்,என்னால் ஆர்டர் செய்பவர்களுக்கு உணவு டெலிவரி செய்ய முடிகிறது என்றும் தெரிவித்தார்.மேலும் தன்னை சாலையில் சிலர் ஏளனமாக பார்ப்பதாகவும்,ஒரு சிலர் நீயெல்லம் இந்த வேலையை செய்யலாமா என பேசுவதையும் நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை எனவும் கூறினார்.சிலர் என்னை பாராட்டுவதாகவும் கூறினார்.காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை உணவு டெலிவரி செய்து வருவதாக கூறினார்.

மாற்றுத்திறனாளிகளை, “ஏளனமாக பேசுபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் ஒன்றெ ஒன்று சொல்லிக் கொள்கிறேன் ,நாங்கள் எல்லாம் மாற்றுத்திறனாளிகள் அல்ல,மாற்றுத்திறன் கொண்டவர்கள்”,என அவர் நம்பிக்கையுடன் கூறினார்.தன்நம்பிக்கையோடு உழைக்கும் அனைவரும் சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டியவர்களே என அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like