ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதி..!!

காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்று இந்துக்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த மசூதியின் 'தெஹ்கானாக்கள் எனப்படும் அடித்தளத்தில், 4 பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் ஒரு அறை, வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த வியாஸ் குடும்பத்தினரிடம் வசம் இன்னும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவரது மனுவில் "1993 வரை மசூதியின் அடித்தளத்தில் இந்து மத பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசின் உத்தரவை தொடர்ந்து இந்த பூஜைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் இங்குப் பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும்" என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று (ஜனவரி 31) உத்தரவு பிறப்பித்த வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதி பாதாள அறையில் இந்துக்கள் பூஜை நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.