1. Home
  2. தமிழ்நாடு

152 வது ஆண்டாக தொடரும் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்க விழா..!

1

ராசிபுரம் அருகே உள்ள சிவசுப்ரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்று கூடி சந்தனம் பூசிக்கொள்ளும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.

குருசாமி பாளையம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்று கூடி சந்தனம் பூசும் விழா நடைபெற்றது.

இருதரப்பு மக்களும் ஒருவருக்கு ஒருவர் பூமாலை மாற்றிக்கொண்டு, ஆரத்தழுவி சந்தனம் பூசிக்கொண்டதுடன், வீடுகள் தோறும் சென்று கதவுகளில் சந்தனம் பூசினர். இந்த நிகழ்ச்சியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து சந்தனம் பூசி ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ந்தனர்.

Trending News

Latest News

You May Like