1. Home
  2. தமிழ்நாடு

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது..!

Q

திண்டுக்கல் அபிராமி அம்மன் புகழ் ஓங்கும் வகையில் அபிராமி அம்மன் பக்தர்கள் குழு, ஹிந்து முன்னணி சார்பில் வேடசந்துாரில் அபிராமி அம்மன் சிலையை வைத்து சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு நடந்தது. இதை தொடர்ந்து ஒன்றியத்திற்கு இரு இடங்கள் என முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்களே பூஜை செய்து வழிபடவும், இதன் தொடர்ச்சியாக ஏப்.,27-ல் திண்டுக்கல்லில் ஆன்மிக மாநாடு நடத்தவும் அதில் மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று மாலை நடக்கவிருந்த பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் அங்கு சென்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில பொருளாளர் பரமசிவம் தலைமையில் அபிராமி அம்மன் சிலை வைக்கப்பட்டிருந்த தனியார் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். பூஜையை முடித்து வெளியே வந்த இரு வழக்கறிஞர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து ஆத்து மேடு செல்லும் மெயின் ரோட்டில் மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். செந்தில்குமார் உள்ளிட்டோரை போலீசார் குண்டு கட்டாக துாக்கி சென்று கைது செய்தனர். இவருடன் 10 பெண்கள் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மன், சுவாமி சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இன்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இதே பகுதிக்கு வந்து அபிராமி அம்மன் சிறப்பு பூஜையை துவக்கி கிராமங்களுக்கு எடுத்து செல்வார் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் செந்தில்குமார் கூறியிருந்தார்.
வேடசந்தூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக கிளம்பிய காடேஸ்வரா சுப்பிரமணியத்தை திருப்பூரில் தடுத்து நிறுத்தி போலீசார் அங்கேயே அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து இந்து முன்னணியினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Trending News

Latest News

You May Like