1. Home
  2. தமிழ்நாடு

பன்றியை பலியிட தடை விதித்துள்ள காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது - இந்து முன்னணி மாநிலத்தலைவர்..!

Q

இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியாத்தம் அடுத்த ஜிட்டபள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் நடுகல் மற்றும் முனீஸ்வரர் கோயிலில் திருவிழா நடத்தவும், பன்றியைப் பலியிடவும் தடை விதித்துள்ள காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகமெங்கும் பல்வேறு இந்து சமூகத்தினர் குலதெய்வங்களுக்குப் பன்றியைப் பலிகொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மதக்கலவரத்தைத் தூண்டும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு உடந்தையாகத் தமிழக அரசும், காவல்துறையும், வருவாய் துறையும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்துக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதைக் கண்டித்து இந்து முன்னணி போராடும் எனவும் இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்

Trending News

Latest News

You May Like