இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த நிலையில், திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதல் திடீரென நடந்ததாகவும், முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையின் முழு பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.