1. Home
  2. தமிழ்நாடு

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது..!

1

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனும், கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமாக இருப்பவர் ஓம் கார் பாலாஜி. கடந்த 27 ஆம் தேதி கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஈஷாவுக்கு எதிராக செய்தி வெளியிடும் நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கு அறுக்கப்படும் என்றும் ஓம் கார் பாலாஜி பேசியிருந்தார்.

 

இதுதொடர்பாக, திமுக பிரமுகர் அளித்த புகாரின்பேரில், கோவை பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கைது செய்ய இடைக்கால தடையை நீட்டிக்க மறுத்ததோடு, முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த நிலையில், ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து, பந்தயசாலை காவல் நிலையம் முன்பு அர்ஜூன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி போராட வந்த அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார். மேலும், ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோரையும் போலீசார் கைது செய்தனர்.


 

Trending News

Latest News

You May Like