இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மருத்துவமனையில் அனுமதி!

மூச்சுத்திணறல் காரணமாக இந்து முன்னணி அமைப்பின் மூத்த தலைவர் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போதும் போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
newstm.in