1. Home
  2. தமிழ்நாடு

மத்திய அரசு வழங்கிய நிதியை திருப்பி அனுப்பிய இமாச்சல்..!

1

இமாச்சலப் பிரதேச அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

மாநில அரசானது தொழிற்பூங்கா அமைக்க இதுவரை ரூ.74.95 கோடி செலவிட்டுள்ளது. எனவே மாநிலத்தின் விருப்பத்தின்படி, மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள ரூ.30 கோடியைத் திருப்பி அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்பூங்கா அமைப்பதற்கான மொத்த செலவு ரூ. 350 கோடியாகும். 

இது குறித்து அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், 

265 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு வழங்கிய ரூ. 30 கோடியை நாங்கள் ஏற்றால், இந்த வளாகத்தில் உள்ள நிலங்களை தொழிலதிபர்களுக்கு ஒரு சதுரடி ஒரு ரூபாய்க்கும், ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய்க்கும், மற்ற அனைத்து வசதிகளையும் அடுத்த 10 வருடங்களுக்கு இலவசமாகவும் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். 

எனவே நாங்களே எங்களது நிதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் அடுத்த 5 முதல் 7 வருடங்களில் மாநில அரசுக்கு ரூ. 500 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.   

Trending News

Latest News

You May Like