1. Home
  2. தமிழ்நாடு

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்..!

1

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றி வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, "புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது ' எனக் கூறினார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற பல நூற்றாண்டுகளாக இருந்த ஆசை நிறைவேறி உள்ளதாகக் கூறினார், கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டினார். இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத் தொடர்.

கடந்த கால சவால்களைத் தோற்கடித்து, நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு பாதையில் சென்றால் மட்டுமே ஒரு நாடு வேகமாக முன்னேற முடியும். 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார். 

'பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த பல திட்டங்கள், "கடந்த பத்து ஆண்டுகளில் நிறைவேறியதை இந்த நாடு கண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்று அது நிஜமாகிவிட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை நீக்குவது குறித்து அச்சங்கள் இருந்தன. ஆனால் அவை இப்போது வரலாறாக மாறி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்தால், பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

போர் விமானங்களை இன்று பெண்களே இயக்குகிறார்கள்

இந்தியப் பொருளாதாரம் பலவீனமான இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் மேற்கொண்ட பல சீர்திருத்தங்களால் இப்போது சரியான திசையிலும் சரியான வேகத்திலும் நகர்கிறது.

உலகின் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது 

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடியாக உயர்ந்துள்ளது.

நிதி ஆயோக் படி, கடந்த 10 ஆண்டு ஆட்சியில், கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. அது இப்போது 4 சதவீதத்திற்குள் உள்ளது

மத்திய அரசின் திட்டங்கள் மூலமாக விவசாயிகள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.18 லட்சம் கோடி தரப்பட்டுள்ளது. 

சந்திரயான் திட்ட வெற்றியால், நிலவில் இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது

இன்று தேசிய அளவில் 80% குடும்பங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றன. 

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் 84 லட்சம் பேர் இணைந்துள்ளார்கள்.

கடந்தாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். 

உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46% ஆக உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like