1. Home
  2. தமிழ்நாடு

நாளை பொறியியல் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி..!

1

தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

இந்நிலையில், நடப்பு கல்விஆண்டில் (2024-25) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவுசெய்திருந்த போதிலும், அவர்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 853 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.

அவர்களுக்கு ஜுன் 12-ம் தேதி ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து, ஜுன் 13 முதல் 30-ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நாளை (புதன்) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள மாநிலதொழில்நுட்பக்கல்வி ஆணையரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார்.

Trending News

Latest News

You May Like