அதிக ஒமைக்ரான் பாதிப்பு.. இந்தியாவில் தமிழகத்திற்கு 3ஆவது இடம் !!

இந்தியாவில் அதிகம் ஒமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3ஆவது இடத்திற்கு தாவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவிய ஒமைக்ரான் வகை கொரோனா தற்போது நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 132 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 65, டெல்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் 34, தெலங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு - காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரம் 2, சண்டிகர், லடாக், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று(டிச.22) நிலவரப்படி தமிழகத்தில் ஒருவருக்கு தான் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. தற்போது ஒரே நாளில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக அதிகரித்து இந்திய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 3ஆவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in