#BIG NEWS:- நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய, கடந்த 2018 செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானம் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல், தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.
தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறி ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். கவர்னரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் மாலா ஆகியோர் கொண்ட அமர்வு, இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்ததுடன், உச்சநீதிமன்றம் போல் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறியுள்ளதுடன், இருவரையும், உச்சநீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது.