“வழுக்கையை மறைத்துவிட்டார்” : கணவனை கைது செய்யக்கோரி மனைவி புகார்!

வழுக்கையை மறைத்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொண்டுவிட்டதாக பெண் ஒருவர் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
மும்பையில் 27 வயது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் தனக்கும் தனது 29 வயது கணவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது என்றும், அவர் தனக்கு வழுக்கை இருப்பதை மறைத்து விக் வைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக குறிப்பிடுள்ளார்.
அவருக்கு வழுக்கை இருப்பது திருமணத்திற்கு பிறகே தனக்கும் தனது குடும்பத்திற்கும் தெரியவந்தது. மேலும் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்துக்கொள்ளவும் அவர் வற்புறுத்துகிறார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அந்த பெண்ணின் கணவர், தானேவில் உள்ள நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், இதுகுறித்து தனது மாமியாரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன் எனவும் அதற்கு இதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை என மாமியார் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தானே நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவரை போலீசில் சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ளது.
newstm.in