ஹே சூப்பர்ஸ்டாரு டா...கெட்ட பையன் சாரு டா..!
வேட்டையன் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தில் ரஜினி மற்றும் மஞ்சு வாரியரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹசன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். கூலி படம் பற்றிய அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இன்று (20-9-24) வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரீவ்யூவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அமிதாப் பச்சனுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்திருப்பது ரசிகர்களுக்கு சப்ரைஸ் எலிமெண்ட்டாக உள்ளது. மேலும், க்ரைம் த்ரில்லர் பாணியில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது என்றும் என்கவுண்டர் குறித்த ஆழமான கதையை படம் பேசியுள்ளதாகவும் ப்ரீவ்யூவை பார்த்த ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.