1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷாரா இருங்க..! ஃப்ரிட்ஜ் வெடிப்பதற்கு இதுதான் காரணம்..!

1

ஏன் திடீரென குளிர்சாதன பெட்டிகள் வெடிக்கின்றன? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் செய்ய வேண்டியது என்ன?

இன்றைய காலத்தில் இன்வெர்டர் டெக்னாலஜி என்ற குளிர்சாதன பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் தற்போது இந்த தொழில் நுட்பத்தைத் தான் பயன்படுத்து வருகிறோம். ஃப்ரிட்ஜ் இயங்குவதற்கு சமையல் கியாஸ் உபயோகிக்கப்படுகிறது. 80 சதவீதம் இந்த சமையல் கியாஸ் வைத்து தான் ஃப்ரிட்ஜ் இயங்குகிறது.

குளிர்சாதன பெட்டியின் பின்புறம் கீழ் பகுதியில் உள்ள கம்பிரசரில் இந்த கியாஸ் நிரப்பப்பட்டிருக்கும். இந்த கம்பிரசர் அதிகமாக அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் வெளியூர்களுக்கு செல்லும்போது ஃப்ரிட்ஜ்-ஐ ஆஃப் செய்துவிட்டு செல்வது நல்லது. அவ்வப்போது கம்பிரசர் சூடாகியுள்ளதா? என்பதை சோதிக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் உள்ள ப்ரீசர் பகுதியில் அதிக பொருட்களை வைக்கக்கூடாது. இதனால் கம்பிரசர் அதிகமாக சூடாக வாய்ப்புள்ளது. இதனாலும் ஃப்ரிட்ஜ் வெடிக்கலாம்.

பிரிட்ஜ் பின்புறம் உள்ள கேஸை கடத்த மெல்லிய பைப் லைன்கள் இருக்கும், இவை நாம் பிரிட்ஜை நகட்டும் போதும் அசைக்கும் போதும் கீறல் விழுந்து கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போல் மாப்போட்டு தரையை துடைக்கும் போதும் கூட பிரிட்ஜில் பட்டு கம்பிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு நடக்கும் போது எதிர்பாராத விதமாக கேஸ் லீக் ஆகி வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் பிரிட்ஜை நகர்த்தும்போது, நெருங்கும் போதும் கவனமாக கையாள வேண்டும். தினமும் பிரிட்ஜை குறைந்தபட்சம் இரண்டு முறையாவது திறந்து மூட வேண்டும்.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பிரிட்ஜை நகட்டும் போது பிரிட்ஜிற்கு 30 நிமிடம் ஓய்வு கொடுத்துவிட்டு கழட்ட வேண்டும். அதே போல் அதனை ஆன் செய்யும் போது 30 நிமிடம் சீராக ஒரே இடத்தில் வைத்துவிட்டு ஆன் செய்ய வேண்டும்.

அதே போல் பிரிட்ஜை கெமிக்கல்கள் கொண்டு சுத்தம் செய்யாமல் சாதாரண எழுமிச்சை சாறு கொண்டு சுத்தம் செய்தால் பாதிப்பு ஏற்படாது. பிரிட்ஜிற்கு பின்னால் சேகரமாகும் தண்ணீரை அவ்வப்போது எடுத்துவிட வேண்டும். அதே போல் பிரிட்ஜ் மேலே உணவு பொருட்கள், ஐயன்பாக்ஸ், செல்போன், அழகு சாதன பொருட்கள் என தேவையற்ற பொருட்களை வைக்கக்கூடாது. 

அதேபோல் ஏசி உள்ள அறையில் பிரிட்ஜை பயன்படுத்தக் கூடாது. பிரிட்ஜில் உள்ள கம்பரசரை அடிக்கடி செக் செய்து கொள்ள வேண்டும். கம்பரசரை மாற்றவில்லை என்றாலும் அதில் உள்ள கேஸை குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றுவது நல்லது. பிரிட்ஜில் அடிக்கடி வேலை வராமலும் இருக்கும். அதே போல் பிரிட்ஜ் வெப்பமான இடத்தில் வைக்கக்கூடாது. சுவருக்கும் -  பிரிட்ஜிற்கும் போதுமான இடைவெளி வேண்டும். குழந்தைகளை பிரிட்ஜ் பின் புறத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாது

Trending News

Latest News

You May Like