1. Home
  2. தமிழ்நாடு

அவர்தான் சொல்றாரு... விஜயலட்சுமி அப்டிலாம் சொல்லல - சீமான்!

Q

தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது  நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் கடந்த 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக கடந்த 17 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் 12வாரத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டார். வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமான் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இதன் விவரங்கள் நேற்று வெளியானது. அதன்படி விஜயலட்சுமி எதற்காக வழக்கை திரும்ப பெற்றார்? என்றும் சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும் சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது என்றும் விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்றும் தெரிவித்த நீதிபதி சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது என்ற விஜயலட்சுமியிடமிருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளதாக விஜயலட்சுமியின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குடும்ப பிரச்னை, திரைத்துறை பிரச்னை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகியபோது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார் என்பது வழக்கு விசாரணையில் தெரிகிறது என்றும் பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்றும் அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாதக நிர்வாகிகள் விஜயலட்சுமியை மிரட்டியதால்தான் அவர் வழக்கை வாபஸ் பெற்றதாக நீதிபதி தெரிவத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், விஜயலட்சுமி அப்படி கூறவில்லை. நீதிபதிதான் அப்படி கூறியுள்ளார். விசாரணையில் அனைத்தும் தெரியவரும். அதுவரை பொறுமையாக இருங்கள் என பதில் அளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like