1. Home
  2. தமிழ்நாடு

ஏங்க அவரு கறவை மாடு வேணும்னு கேக்குறாரு.. கணவரை இல்ல - முதல்வரை பங்கமா கலாய்க்கும் இபிஎஸ்...!

1

2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின்(அன்றைய எதிர்க்கட்சி தலைவர்) நேரில் சென்று பொதுமக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை தீர்த்து வைப்பதாக கூறி கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த நேரத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு எதிராக அலை வீசிய போது, திமுகவின் பிரச்சாரங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

”நான் முதல்வர் ஆன பிறகு கோட்டைக்கு நேரடியாக வந்து மனுக்களை காண்பித்து என்னை சந்திக்கலாம் ” என பிரச்சாரங்களில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை கண்டு பொதுமக்கள் பூரித்துப் போனார்கள்.

இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக அப்போது பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலினை கிண்டலடிக்கும் விதமாக பரப்புரையில் பேசியது நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதில், கடந்த 2021-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர் ஸ்டாலின். அந்த நிகழ்ச்சியில், ஒருவர் முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைப்பார். அதில், ”தளபதியாரே எனக்கு கறவை மாடு ஒன்று வாங்கி கொடுக்க வேண்டும்” என கூட்டத்தில் இருந்தவர் கேட்க, அதற்கு “உங்களுடைய கணவரை கண்டுபிடித்து தருமாரு கொடுத்த மனு மீது தீர்வு காணப்பபடும்” என முதல்வர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

”கணவரை காணவில்லை கண்டுபிடித்து கொடுக்குமாறு” மனுவில் குறிப்பிட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சொல்வதை எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசிய காட்சிகளை நேற்று முதல் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ”இது என்ன முதல்வரே”, என கமேண்ட் செய்து முதல்வர் ஸ்டாலினை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள்.


 


 

Trending News

Latest News

You May Like