அடுத்த 10 நாள் மழை நிலவரம் இது தான்... பெரிய லிஸ்ட்டை கொடுத்த வெதர்மேன்..!

தமிழகத்திற்கு இன்னும் எத்தனை நாட்கள் மழை தொடரும் என்பது குறித்த தகவல்களை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இதுவரை கோடை இல்லாத ஏப்ரல் மாதமாகவே இது இருந்துள்ளது. அடுத்த 10 நாட்களுக்கும் இதே போக்கு தான் தொடரும். கன்னியாகுமரியில் வெப்பத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் அங்கு மீண்டும் மழை பெய்துள்ளது. அங்கு தான் அதிக மழை பெய்துள்ளது. ஆனால், மழை இன்னும் முடிவடையவில்லை. அடுத்த 10 நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.
சென்னையை பொறுத்தவரை வரும் ஏப்ரல் 9 முதல் 11ஆம் தேதிகளில் மழை பெய்யும். சென்னை மிகவும் ஈரப்பதமாக இருக்கும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை மறக்க வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.