1. Home
  2. தமிழ்நாடு

கங்குவா படத்தின் முதல் விமர்சனம் இதோ..! ரசிகர்கள் குஷி..!

1

சூர்யா தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கிட்டத்தட்ட பத்து மொழிகளில் பான் இந்திய படமாக இப்படம் உருவாகியுள்ளது.கங்குவா திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அதே நாளில் வெளியாகிறது என்பது கூடுதல் தகவல் 

கங்குவா வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படம் என்பதால் இப்படத்தில் விதவிதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் சூர்யா. இந்த நிலையில், கங்குவா படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார் ஜோதிகா, அதன்படி அப்படத்தின் சில காட்சிகளை மட்டுமே தான் பார்த்ததாக கூறி உள்ள அவர், அதற்கே பிரம்மித்துப் போனதாகவும், தமிழ் சினிமா இதுவரை காணாத ஒரு படமாக கங்குவா இருக்கும் என அவர் உறுதிபட கூறி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து பாடலாசிரியர் விவேகா சமீபத்தில் கங்குவா படத்தை பார்த்துவிட்டு தன் விமர்சனத்தை கூறியிருக்கின்றார். அவர் கூறியிருப்பதாவது ,கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம். இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சூர்யா ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

Trending News

Latest News

You May Like