1. Home
  2. தமிழ்நாடு

சத்திய சோதனை படத்தின் ட்ரைலர் இதோ!

1

எழுத்தாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கொண்டாடித்தள்ளிய ‘ஒரு கிடாரியின் கருணை மனு’ படத்தை இயக்கியவர் சுரேஷ் சங்கையா. இவர் தற்போது, பிரேம்ஜி அமரனை வைத்து சத்திய சோதனை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

காந்தியின் சுயசரிதை நூலான சத்திய சோதனை தலைப்பையே படத்தின் தலைப்பாக வைத்து காவல்துறை கதைக்களத்தோடு எடுக்கப்பட்டுள்ளது. இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்

இப்படத்தில் பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வயம் சித்தா, ரேஸ்மா மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் தன் 38 வயதில் உடல்நலக்குறைவால் காலமானது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருந்த நிலையில், சத்திய சோதனை படத்தின் மூலம் மீண்டும் சுரேஷ் சங்கையா உடன் ரகுராம் கைக்கோர்த்திருந்தார்.ஆனால் தன் சிறு வயது முதலே ALS எனப்படும் Amyotrophic Lateral Sclerosis எனும் அரியவகை நோயால் ரகுராம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.இந்த படத்தை அவருக்கு சமர்ப்பிப்பதாகவும் படக்குழு சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது..

Trending News

Latest News

You May Like