சக்திவாய்ந்த 'டாப் 10' நாடுகள் பட்டியல் இதோ! இந்தியா முதல் 10 இடத்தில் இல்லை..!

சக்திவாய்ந்த டாப் 10 நாடுகள் பட்டியல் விவரம் பின்வருமாறு:
சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. பட்டியலில் இஸ்ரேல் 10வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை. போர்ப்ஸ் மதிப்பீடுகளின்படி, இந்தியா 12ம் இடத்தில் உள்ளது.
'டாப் 10' நாடுகள் பட்டியல் இதோ!
1. 34.5 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவின் பொருளாதாரம் 30.34 டிரில்லியன் டாலராக உள்ளது.
2. 141.9 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவின் பொருளாதாரம் 19.53 டிரில்லியன் டாலராக உள்ளது.
3. 14.4 கோடி மக்கள் தொகை கொண்ட ரஷ்யாவின் பொருளாதாரம் 2.2 டிரில்லியன் டாலராக உள்ளது.
4. 6.91 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவின் பொருளாதாரம் 3.73 டிரில்லியன் டாலராக உள்ளது.
5. 8.45 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியின் பொருளாதாரம் 4.92 டிரில்லியன் டாலராக உள்ளது.
6. 5.17 கோடி மக்கள் தொகை கொண்ட தெற்கு கொரியாவின் பொருளாதாரம் 1.95 டிரில்லியன் டாலராக உள்ளது.
7. 6.65 கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்சின் பொருளாதாரம் 3.28 டிரில்லியன் டாலராக உள்ளது.
8. 12.37 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானின் பொருளாதாரம் 4.39 டிரில்லியன் டாலராக உள்ளது.
9. 3.39 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதி அரேபியாவின் பொருளாதாரம் 1.14 டிரில்லியன் டாலராக உள்ளது.
10. 93.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலின் பொருளாதாரம் 550.91 பில்லியன் டாலராக உள்ளது.