குறைந்த வட்டியில் அரசே கடன் வழங்கும் சூப்பரான திட்டங்களின் லிஸ்ட்..!

மக்களின் சிரமத்தை போக்குவதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் தான் முத்ரா யோஜனா. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடவும் குடிமக்களுக்கான சிறப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் மூன்று பிரிவுகள் உள்ளது. ஷிஷு என்ற பிரிவின் கீழ் 50000 கடன் வழங்கப்படுகிறது, கிஷோர் என்ற பிரிவின் கீழ் 50000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையும், தருண் என்ற பிரிவின் கீழ் 5 லட்ச முதல் 10 லட்சம் ரூபாய் வரையும் கடன் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு எந்த பிணயமும் அல்லது உத்திரவாதமோ தேவையில்லை. இதற்கான வட்டி விகிதமும் மிக குறைவு தான்.
அதனைப் போலவே ஸ்டாண்டர்ட் இந்தியா என்ற திட்டம் பெண் தொழில் முனைவோருக்கான சிறந்த திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் புதிய தொழில் தொடங்க 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இது பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தொழில் தொடங்க ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகின்றது
மாநில அரசுகளால் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பூஜ்ஜிய வட்டி அல்லது மிக குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடிசைத் தொழில்கள் அல்லது சிறு தொழில்களுக்கு பெண்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்ததாக விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மூலமாக விவசாயிகள் செலவுக்காக 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டியும் மிக குறைவு தான். கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் சில நேரங்களில் பூஜ்ஜிய சதவீத வட்டி விகித நன்மையை கூட விவசாயிகள் பெற முடியும்.