'மாஸ்டர்' லோகேஷ் கனகராஜின் அடுத்த ஐந்து படங்களின் லிஸ்ட் இதோ!

கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் ஆகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி வெளிவந்த பிறகு அவரது ரேஞ்சே மாறிவிட்டது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் வெளிவர தயாராக இருக்கும் சூழலில், லோகேஷின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த அறிவிப்பு கோலிவுட்டில் அரசல் புரசலாக பேசப்படுகிறது.
முதலில் ரஜினிகாந்தை வைத்து கமலின் தயாரிப்பில் தலைவர் 167ஆவது படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கைதி இரண்டாம் பாகம், மீண்டும் விஜய் உடன் கூட்டணி சேர்ந்து பிரமாண்டமான படத்தை இயக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. நான்காவது படமாக சூர்யாவுடன் இணைந்து ஏற்கனவே உருவாக இருந்து கைவிடப்பட்ட ‘இரும்புக்கை மாயாவி’ என்ற படத்தை இயக்க உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து விக்ரம் அல்லது துருவ் விக்ரம் வைத்து எடுக்க வாய்ப்பு இருக்கிறதாம். விக்ரமிற்கு சொன்ன கதை படு மாஸ் கதையாம். அதனால் அவரது மகனுக்கு கிடைக்க வழி செய்வார் விக்ரம் என்று கூறப்படுகிறது.
newstm.in